Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிறைவேறியது ஜிஎஸ்டி; இனி இந்தியாவுக்கு நல்ல காலம்தான்!

கடந்த எட்டு ஆண்டுகளாக விவாதத்தில் இருந்த பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் இன்று (03.08.16) வெற்றிகரமாக நிறைவேறியது.

இதுவரை இந்தியாவில் கலால்வரி, விற்பனை வரி, சேவை வரி என்று பல விதமான வரிகள் அமலில் இருந்தன. இவற்றில் பல மறைமுக வரி ஆகும். பல வகை வரிகள் இருந்தாலும் வரி ஏய்ப்பு அதிக அளவில் இருந்துகொண்டிருந்த நிலையில் ஒரு முனை வரி விதிப்பு திட்டமான ஜிஎஸ்டி எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரி திட்டத்தை காங்கிரஸ் அறிமுகப்படுத்தியது.

நாட்டிற்கு அனைத்து வகையிலும் நன்மை பயக்கும் இந்த வரி திட்டத்தை சமீபத்தில் ஆட்சியைப் பிடித்த பாஜகவும் வரவேற்று அதனை நடைமுறைக்கு கொன்டு வருவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியது. இந்நிலையில் காங்கிரஸ் உட்பட பல கட்சிகளும் மாநில அரசுகளும் இந்த மசோதாவில் திருத்தம் கோரியிருந்தன. அந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டு இன்று வரைவு சுற்றுக்கு விடப்பட்டது. இறுதியில் வெற்றிகரமாக அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் (அதிமுக தவிர)நிறைவேறியது. இதனை பல பொருளாதார வல்லுநர்கள் வரவேற்று பாராட்டியுள்ளனர்.

இந்தியாவில் நேரடி வரி மற்றும் மறைமுக வரி விதிப்பின் மூலம் மத்திய அரசு சுமார் 14.6 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தைப் பெறுகிறது. இதில் 34 சதவீதம் மறைமுக வரியாகும். இனி நாடு முழுவதும் ஒரே வரி. இதனால் பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றத்தை இந்தியா அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ