Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜ்யசபாவில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்; இந்தியப் பங்குச்சந்தை அதிகரிப்பு!

 
காலை 10.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (04.08.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் ஜிஎஸ்டி மசோதா நேற்று மாநிலங்களவையில் பரிசீலனைக்கு கொண்டுவரப்பட்டது. ஜிஎஸ்டி வரி குறித்த விவாதங்கள் மாநிலங்களவையில் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மக்களவையில் நேற்று வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த நிலையில் இன்றைய வர்த்தகம் சர்வதேச சந்தை சாதகமாக நிலவி வருவதாலும், ராஜ்யசபாவில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியதாலும் இந்திய பங்குச்சந்தைகள் அதிகரித்து காணப்படுகிறது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 85.40 புள்ளிகள் உயர்ந்து 27,782.91 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 21.25 புள்ளிகள் உயர்ந்து 8556.10 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா மோட்டார்ஸ் 496.75 3.84%
டாடா ஸ்டீல் 368.00 2.78%
டாடா மோட்டார்ஸ் (டி) 322.05 2.76%
பஜாஜ் ஆட்டோ 2,771.85 2.10%
ஹீரோ மோட்டோகார்ப் 3,298.00 2.07%
 
விலை குறைந்த பங்குகள்
 
பிபிசிஎல் 564.00 -1.55%
லூபின் 1,659.00 -1.24%
ஐசிஐசிஐ வங்கி 239.60 -1.03%
பார்தி இன்ப்ராடெல் 392.70 -0.81%
இன்டஸ் இன்ட் வங்கி 1,170.20 -0.70%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ