Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஒரே நாடு, ஒரே வரி'- ஜிஎஸ்டி; ஆனால் எந்த துறைக்கு சாதகம், பாதகம்?

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை (ஜிஎஸ்டி) மத்திய அரசு ராஜ்யசபாவில் நேற்று (03.08.16) நிறைவேற்றியுள்ளது. இந்த ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வரும் போது எந்த துறைக்கு சாதகம் மற்றும் பாதகம் என்பதை பார்ப்போம்.
 
 
பல்வேறு துறைகளில் ஜிஎஸ்டி தாக்கம்!
 
1) வங்கிகள்:-
 
தற்போதைய சேவை வரி 15%. ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போது 18%. இது நெகட்டிவ்வான விஷயமாகும். 
 
2) ஊடகம்:-
 
தற்போது மாநிலத்தில் சேவை வரி 15%, கேளிக்கை வரி 7% வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போது 18% வரி மட்டுமே. இது பாசிட்வ் ஆன விஷயம்.
 
3) தொலைத்தொடர்பு:-
 
தற்போதைய வரி 15%. ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போது 18%. இது நெகட்வ் ஆன விஷயம்
 
4) ஆட்டோ மொபைல்ஸ்:-
 
தற்போதைய வரி 27%. ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போது 18%. இது மிகவும் பாசிட்வ் ஆன விஷயம்.
 
5) உலோகங்கள்:-
 
தற்போதைய வரி 18%. ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போதும் 18%தான். ஆகையால் இந்த துறையில் பெரிய அளவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
 
6) சிமென்ட்:-
 
தற்போதைய வரி 27%. ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போதும் 18%. இது மிகவும் பாசிட்வ் ஆன விஷயம். இதனால் சிமென்ட் நிறுவனங்களின் விலை குறையும் என்று கூறப்படுகிறது.
 
7) பார்மா:-
 
தற்போதைய வரி 15%. ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போதும் 18%. இது நெகட்வ் ஆன விஷயம்.
 
8) ரியல் எஸ்டேட்:-
 
தற்போதை ஸ்டாம்ப் டூட்டி 15% முதல் 16% வரை. ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போதும் 18%. எனவே ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
 
9. ஏர்லைன்ஸ்:-
 
தற்போதைய சேவை வரி 6% முதல் 9%. ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வரும் போது 18%. இது மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் விமான பயணத்திற்கான டிக்கெட் செலவு அதிகரிக்கும். இது நெகட்டிவ் ஆன விஷயம்.

10. இன்ஷூரன்ஸ்:- 
 
தற்போதைய சேவை வரி 15%. ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வரும் போது 18%. இதனால் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் செலவு அதிகரிக்கும். இதுவும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு நெகட்டிவ் ஆன விஷயம்.
 
ஆக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், இது இன்னும் அமலுக்கு வர பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வரும் பட்சத்தில் மேற்கூறப்பட்ட பல துறைகளுக்கு இது சாதகமாகவும், பாதகமாகவும் அமைய உள்ளது.
 
சோ.கார்த்திகேயன்
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ