Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டாளர்களை கவராத ஜிஎஸ்டி மசோதா! ஏன்?

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (04.08.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி இறுதியில் ப்ளாட் ஆக நிறைவடைந்தது.
 
ஜிஎஸ்டி மசோதா நேற்று மாநிலங்களவையில் பரிசீலனைக்கு கொண்டுவரப்பட்டு விவாதங்களுக்கு பின்னர் ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாகவும், சர்வதேச சந்தை சாதகமாக நிலவி வந்த காரணத்தினாலும் இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் காணப்பட்டது. 
 
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஜிஎஸ்டி மசோதா முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்ப்பு இருந்தாலும், யாரும் ஆர்வமாக பங்குகளை வாங்கி குவிக்கவில்லை. மாறாக இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ப்ளாட் ஆகவே முடிவடைந்தன. இந்த மசோதா அமலுக்கு வருவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. மேலும் ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு அதற்கான பலன் ஒரு வருடங்களுக்கு பிறகுதான் தெரியும் என்பதால் முதலீட்டாளர்கள் ஆர்வம் இல்லாத காரணத்தினால் சந்தை அதிகரிக்கவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 16.86 புள்ளிகள் உயர்ந்து 27,714.37 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 6.25 புள்ளிகள் உயர்ந்து 8551.10 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பேங்க் ஆப் பரோடா 155.75 4.64% 
டாடா மோட்டார்ஸ் 500.00 4.52%
டாடா ஸ்டீல் 373.80 4.40%
டாடா மோட்டார்ஸ் (டி) 322.00 2.74%
அதானி துறைமுகங்கள் 227.90 2.27%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,127.30 -1.41%
லூபின் 1,657.65 -1.32%
இன்போசிஸ் 1,071.80 -1.21%
ஜீ மகிழ்விக்க 487.50 -1.09%
இன்டஸ் இன்ட் வங்கி 1,166.30 -1.03%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ