Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இங்கிலாந்தின் ஆக்கிரோஷமான நடவடிக்கையால் லாபமடைந்த இந்திய சந்தை!

காலை 10 மணி நிலவரம்
 
இங்கிலாந்து மத்திய வங்கியின் ஆக்கிரோஷமான நடவடிக்கையால் இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (05.08.16) காலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 
 
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஜிஎஸ்டி மசோதா முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்ப்பு இருந்தாலும், யாரும் ஆர்வமாக பங்குகளை வாங்காத காரணத்தினால் இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று ப்ளாட் ஆக முடிவடைந்தன. இந்த நிலையில் ஆசியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி
வருவதால் இந்தியப் பங்குச் சந்தைகளும் அதிகரித்து காணப்படுகிறது.
 
322 ஆண்டு வரலாற்றில் இங்கிலாந்து மத்திய வங்கி நேற்று தனது முக்கிய வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதத்திலிருந்து 0.25% ஆக குறைத்துள்ளது. இது வரும் மாதங்களில் மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி வருகின்றன. இதன் தாக்கத்தின் இந்திய பங்குச் சந்தைகளும் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
எனினும் இன்று வாரத்தின் இறுதி நாள் என்பதாலும், அமெரிக்காவின் வேலைவாய்ப்பு குறித்த முக்கிய டேட்டா வெளிவர உள்ள காரணத்தினாலும் முதலீட்டாளர்கள் சந்தையில் உஷாராக வர்த்தகம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 256.67 புள்ளிகள் உயர்ந்து 27,975.20 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 79.10 புள்ளிகள் உயர்ந்து 8630.10 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹிண்டால்கோ 141.45 3.17%
ஐசிஐசிஐ வங்கி 247.20 2.85%
பி.எச்.இ.எல் 137.70 2.84%
எஸ்பிஐ 231.80 2.73%
பேங்க் ஆப் பரோடா 158.85 1.99%
 
விலை குறைந்த பங்குகள்
 
இன்போசிஸ் 1,067.90 -0.36%
போஷ் 24,886.55 -0.28%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ