Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கார்த்திகா ஷாம்பு' தேசிய அளவில் கவின்கேர் அறிமுகம்

நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் கிடைக்கும் வகையில் 'கார்த்திகா ஷாம்பு' தேசிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கவின்கேர் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
 
இல்லங்களில் வாங்கப்படும் பொருட்கள் பட்டியலில் 2016 மார்ச்-ஏப்ரல் மாத அறிக்கையின்படி கார்த்திகா ஷாம்பு தென்னிந்தியாவில் 2.14 கோடி இல்லங்களில் வாங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகா தென்னிந்தியாவில் தன்னை முன்னிலைப்படுதிக் கொண்டிருப்பதுடன், இந்தப் பிரிவில் ஆதிக்கத்தையும் செலுத்தி வந்திருப்பதுடன் தென்னிந்தியாவில் தனக்கென ஒரு நுகர்வோர் அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. கவின்கேர் நிறுவனத்தில் இருந்து வந்துள்ள இந்த வெற்றிகரமான பொருள் இனி நாடு முழுவதும் உள்ள முன்னணி சில்லறை விற்பனையகங்களில் மற்றும் புறநகர் கடைகளிலும் கிடைக்கும். கடந்த 2006ம் ஆண்டு ஆந்திர பிரதேசத்திலும் அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் கார்த்திகா அறிமுகம் செய்யப்பட்டது.
 
இது குறித்து கருத்து தெரிவித்த கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சி கே ரங்கநாதன் கூறுகையில், “மூலிகை பொருட்கள் சந்தையில் வரும் காலங்களில் நேர்மறையான க்ண்ணோட்டம் காணப்டும் சரியான தருணத்தில் கார்த்திகா ஷாம்பு நாடு தழுவிய அளவில அறிமுகப்படுத்தப்படுகிறது. மூலிகை பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே தென்னிந்திய சந்தைகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கார்திகா ஷாம்பு நாடு தழுவிய அளவிலும் வரவேபைப் பெறும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மூலிகை சிகை பராமரிப்பு பிரிவில் ஏற்கனவே முன்னணியில் உள்ள நாங்கள் எங்களது சிறப்பு பெற்ற பொருளை நாடு தழுவிய அளவுக்கு கொண்டு செல்ல விரும்புகிறோம். இதன் மூலம் 2017ல் கார்த்திகா ஷாம்புவின் வருவாயை 100 கோடி ரூபாயாக உயர்த்துவதே எங்கள் நோக்கம்” என்றார்.
 
ஹேர் ஃபால் ஷீல்ட், டிரைனஸ் ஷீல்ட் மற்றும் டேமேஜ் ஷீல்ட் ஆகிய 3 வகைகளில் இந்த ஷாம்பு கிடைக்கும். ஹேர் ஷீல்டில் சீயக்காய் மற்றும் மருதாணி இருப்பதால் அது தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். டிரை ஹேர் ஷீல்டில் நெல்லிக்காய், மருதாணி மற்றும் ஆலோவீரா சரியாக கலக்கப்பட்டிருக்கிறது. டேமேஜ் ஷீல்டில் ரீத்தா மற்றும் ஃபெனுக்ரீன் கலக்கப்பட்டு அதன் மூலம் நீண்ட தலைமுடி வளரும். இந்த வகைகள் கவர்ச்சிகரமான முறையில் பேக் செய்யப்பட்டு ஒரு ரூபாய், 10 ரூபாய் மற்றும் 40 ரூபாய் மற்றும் 95 ரூபாய் விலைகளில் கிடைக்கும்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ