Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி '3D கல்வி' நம் கையில்; தமிழக அரசு அதிரடி!

 

10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு முப்பரிமாண (3D) கல்வி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
 
இன்றைய மதிப்பெண் உலகில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய பாடங்களை வேகமாகப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு உதவும் வகையில் இந்தியாவில் முதன் முறையாகத் தமிழக மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், Image recognition application technologyயைப் பயன்படுத்தி TN SCHOOLS LIVE என்ற ஆன்ட்ராய்டு அப்பிளிகேஷனை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பாடத்தில் சந்தேகமுள்ள படத்தை இந்தச் செயலி மூலம் ஸ்கேன் செய்தால் அதன் முப்பிரிமான படம் தோன்றுவதுடன் அதன் விளக்கத்தையும் அறியலாம். 
 
 
இணைய வசதி இல்லாத மாணவர்களும் பயன் பெறும் வகையில் 6,000 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு குறுந்தகடுகளாக வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
'TN SCHOOLS LIVE' அப்பிளிகேஷனைக் காண க்ளிக் செய்க - - http://bit.ly/2aVuj9U
 
கோ.ப.இலக்கியா 
மாணவ பத்திரிகையாளர்
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ