Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரத்தின் இறுதி நாள்... இந்திய பங்குச் சந்தைகள் 'மகிழ்ச்சி'

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (05.08.16) மாலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
322 ஆண்டு வரலாற்றில் இங்கிலாந்து மத்திய வங்கி நேற்று தனது முக்கிய வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதத்திலிருந்து 0.25% ஆக குறைத்துள்ளது. இதன் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி வருகின்றன. இதன் தாக்கத்தினால் இந்திய பங்குச் சந்தைகளும் காலை முதல் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்தது. இது மாலை பங்குச் சந்தை முடியும் வரை அதிகரித்தே காணப்பட்டது.
 
இன்று வாரத்தின் இறுதி நாள் என்பதாலும், இன்று மாலை அமெரிக்காவின் வேலைவாய்ப்பு குறித்த முக்கிய டேட்டா வெளிவர உள்ள காரணத்தினாலும், வரும் செவ்வாய்கிழமை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ள காரணத்தினாலும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி குவித்ததால் சந்தை உயர்வுடனையே முடிந்தது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 363.98 புள்ளிகள் உயர்ந்து 28,078.35 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 132.05 புள்ளிகள் உயர்ந்து 8683.15 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கிராஸிம் 5,265.45 5.40%
ஹீரோ மோட்டோகார்ப் 3,443.95 5.12%
ஹிண்டால்கோ 143.70 4.81%
அம்புஜா சிமென்ட்ஸ் 275.90 4.35%
பஜாஜ் ஆட்டோ 2,862.10 4.30%
 
விலை குறைந்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா 495.05 -0.98%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 176.50 -0.95%
பார்தி இன்ப்ராடெல் 389.25 -0.87%
சன் பார்மா 841.90 -0.78%
பார்தி ஏர்டெல் 364.00 -0.61%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ