Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆடி முடிஞ்சா ஆவணி வரும்; ஆனா 'ஜிஎஸ்டி' வராது! ஏன்?

டந்த சில தினங்களாகவே 'ஜிஎஸ்டி' எனும் வார்த்தை வெகு பிரபலமாகி வருகிறது. எங்குப் பார்த்தாலும், யார் பார்த்தாலும் இதைப் பற்றி பேசி வருகின்றனர். ஆனால் இந்த ஜிஎஸ்டி மசோதா வெறும் மக்களவையில் மற்றும் மாநிலங்களவையில் மட்டுமே நிறைவேறியுள்ளது. இந்த மசோதா நடைமுறைக்கு வர பல மாதங்கள் ஆகும் என்கின்றனர் நிபுணர்கள். 
 
 
ஜிஎஸ்டி மசோதா மிக முக்கியமான மசோதாவாகும். இது ஐக்கிய முற்போக்கு அரசால் கடந்த 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த மசோதாவை சில காரணங்களால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில் பாஜ அரசு வெற்றி பெற்று கடந்த ஆண்டு மே மாதம் இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. காரணம் மக்களவையைப்போல், மாநிலங்களவையில் பாஜ அரசுக்கு பலம் இல்லாததுதான். இந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் கடந்த சில தினங்களுக்கு முன் மாநிலங்களவையிலும் ஜிஎஸ்டி மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றியது. 
 
இந்த நிலையில் இந்த மசோதா எப்போது, எப்படி நடைமுறைக்கு வரும் என்பது குறித்து சென்னை பல்கலைக் கழகப் பொருளாதாரப் பிரிவு பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் கேட்டோம். அவர் 
 
"ஜிஎஸ்டி மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜிஎஸ்டி கவுன்சில் ஒன்றை உருவாக்கி, அந்தக் குழு கலந்து ஆலோசித்து வரி விகிதங்களை நிர்ணயித்து ஒப்புதல் வழங்க வேண்டும். இதனை மக்களவை ஆதரிக்க வேண்டும். அதன் பின் நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டப் பேரவைகளில் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர் குடியரசுத் தலைவரின் அனுமதிக்குச் சென்று அவர் ஒப்புதல் வழங்க வேண்டும். அதன் பின்னர் இறுதியில்தான் இந்த ஜிஎஸ்டி மசோதா நடைமுறைக்கு வரும்" என்றார். 
 
ஜிஎஸ்டி மசோதா "வரும்.. ஆனா வராது" என்ற நிலை மாறி தற்போது ஒரு வழியாக இந்த மசோதா நடைமுறையில் வர உள்ளது. ஆனால், எப்பொழுது உறுதியாக வரும் என்பதைக் கூற முடியாது என்கின்றனர் நிபுணர்கள். அரசாங்கம் தரப்பில் 2017ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று கூறுகின்றனர். ஆனால், இதே அரசாங்கம்தான் 2015ம் ஆண்டும், 2016ம் ஆண்டு ஏப்ரலில் அமல்படுத்தப்படும் என்று சொன்னது. ஆனால், இப்பொழுதுதான் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகையால் இந்த மசோதாவைப் பொறுத்தவரை தோசையைத் திருப்பி போடுவதைப் போல உடனடியாக அமல்படுத்த முடியாது; ஆடி முடிந்து ஆவணி வந்தாலும் 'ஜிஎஸ்டி' வர வெகு நாட்கள் ஆகும் என்பதால் இதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
 
சோ.கார்த்திகேயன் 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ