Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

 
 
மஞ்சள், ஏலக்காய், சீரகம் போன்ற அக்ரி கமாடிட்டிகளின் விலைப்போக்கு எப்படி இருக்கிறது என்பதையும், இந்த வாரம் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்கலாம்.
 
 
மஞ்சள்!
 
மஞ்சள் விலையைப் பொறுத்தவரை, இந்த வாரம் ஏற்ற இறக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மஞ்சள் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் இருந்து மஞ்சள் விநியோகம் குறைவாக இருக்கிறது. இதன் தேவையும் நிலையாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆகையால் இந்த வாரம் சந்தையில் மஞ்சள் விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கல்ப்டலாம். இந்த வாரம் மஞ்சள் விலை ரூ.8,200 முதல் ரூ.8,300 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஏலக்காய்:-
 
ஸ்பாட் மார்க்கெட் சந்தையில் ஏலக்காயின் தேவை அதிகரித்து வருவதால், ஏலக்காய் ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட் அடுத்த வாரம் ஏற்றத்தில் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் குறைவான அளவிலேயே ஏலக்காய் உற்பத்தி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் ஏலக்காய் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அதிகளவு மழை பெய்த காரணத்தினால் இதன் விநியோகம் பாதிப்படைந்து காணப்படுகிறது. ஆகையால் இதன் தேவை சந்தைகளில் அதிகரித்து வருவதால், ஏலக்காய் விலை இந்த வாரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏலக்காய் ரூ.940-க்கு வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.930 வைத்துக்கொள்ளவும். டார்க்கெட் ரூ.961, ரூ.968.
 
சீரகம்:
 
ஸ்பாட் சந்தையில் சீரகம் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதன் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்து வரும் சீரகம் விநியோகம், அதிகரித்து வரும் ஏற்றுமதி போன்ற காரணங்களால் இதன் விலை உயர வாய்ப்புள்ளது. எனினும் லாப நோக்கம் கருதி விற்பனை மற்றும் அதிக விலை காரணமாக அதிக வரத்து இருக்கும் என்ற எதிர்பார்ப்பால் சீரகம் மிக அதிகளவில் உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. சீரகம் ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட் ரூ.19,250-க்கு வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.19,030 வைத்துக்கொள்ளவும். டார்க்கெட் ரூ.19,587 மற்றும் ரூ.19,713.
 
சோ.கார்த்திகேயன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ