Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க சந்தையால் இந்திய சந்தை அதிகரிப்பு!

காலை 10.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (08.08.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
கடந்த வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை  இங்கிலாந்து மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதத்திலிருந்து 0.25% ஆக குறைத்தது. இதன் தாக்கத்தினால் இந்திய பங்குச் சந்தைகள் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
 
அமெரிக்க பங்குச் சந்தைகள் அதிக ஏற்றத்தில் நிறைவடைந்த காரணத்தினால் சர்வதேச சந்தையும், ஆசிய பங்குச் சந்தையும் எழுச்சியுடன் வர்த்தகமாகி வருகின்றன. இதன் தாக்கத்தினால் இந்தியப் பங்குச் சந்தைகளும் அதிகரித்து காணப்படுகிறது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 93.04 புள்ளிகள் உயர்ந்து 28,165.40 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 25.50 புள்ளிகள் உயர்ந்து 8708.65 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹிண்டால்கோ 150.65 4.84%
பிபிசிஎல் 603.90 2.96%
போஷ் 25,483.95 1.79%
டாடா மோட்டார்ஸ் (டி) 336.40 1.55%
இன்டஸ் இன்ட் வங்கி 1,201.50 1.43%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 103.00 -3.01%
பார்தி இன்ப்ராடெல் 382.65 -1.70%
என்டிபிசி 159.30 -1.33%
பார்தி ஏர்டெல் 359.25 -1.30%
பி.எச்.இ.எல் 136.95 -0.54%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ