Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சதமடித்தது இந்தியப் பங்குச் சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (08.08.16) மாலை நேர வர்த்தகத்தில் 100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
கடந்த வெள்ளியன்று அமெரிக்காவில், வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரம் வெளியானது. இது அமெரிக்க பொருளதாரத்தை உயர்த்தும் வகையில் இருந்ததால்  சர்வதேச சந்தையும், ஆசிய பங்குச் சந்தையும் எழுச்சியுடன்  வர்த்தகமாகின. இதன் தாக்கத்தினால் இந்தியப் பங்குச் சந்தைகள் நாள் முழுவதும் அதிகரித்து காணப்பட்டது. சென்செக்ஸ் பொறுத்தவரை கடந்த ஒரு வருட உச்சத்தில் அதிகரித்து காணப்படுகிறது. நாளை ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை கூட்டம் நடைபெறுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 104.22 புள்ளிகள் உயர்ந்து 28,182.57 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 28.20 புள்ளிகள் உயர்ந்து 8711.35 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹிண்டால்கோ 149.15 3.79%
பிபிசிஎல் 606.75 3.44%
அதானி துறைமுகங்கள் 240.65 2.84%
டாடா பவர் 72.75 2.32%
ஹெச்டிஎப்சி 1,367.45 1.89%
 
விலை குறைந்த பங்குகள்
 
பார்தி ஏர்டெல் 351.55 -3.42%
ஐடியா செல்லுலார் 103.10 -2.92%
பார்தி இன்ஃப்ராடெல் 381.50 -1.99%
சன் பார்மா 832.80 -1.08%
ஐடிசி 249.95 -1.03%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ