Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரகுராம் ராஜன் ஏமாற்றம்; முதலீட்டாளர்கள் லாப நோக்கில் விற்பனை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (09.08.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
இன்று ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ரெபோ எனப்படும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாகவே தொடர்வதாகவும், சிஆர்ஆர் எனப்படும் வங்கிகளின் ரொக்க கையிருப்பபு விகிதமும் 4 சதவிகிதமாகத் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவும், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்த காரணத்தினாலும் இந்தியப் பங்குச் சந்தைகள் இறக்கத்தைச் சந்தித்தது. 
 
இன்றைய கூட்டத்தில் ரகுராம் ராஜன் வட்டி விகிதத்தை குறைப்பார் என முதலீட்டாளர்கள் பரவலாக எதிர்பார்த்தனர். ஆனால் வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாத காரணத்தினால் கடந்த மூன்று நாட்களாக அதிகரித்து வந்த இந்தியப் பங்குச் சந்தையில், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 97.41 புள்ளிகள் குறைந்து 28,085.16 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 33.10 புள்ளிகள் குறைந்து 8678.25 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா பவர் 75.40 3.64
ஜீ எண்டர்டெயின் 512.30 2.38
கோல் இந்தியா 337.15 1.57
ஓஎன்ஜிசி 229.00 1.28
பார்தி இன்ஃப்ராடெல் 384.95 0.90
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 97.15 -5.77%
லூபின் 1,607.25 -5.08%
அம்புஜா சிமென்ட்ஸ் 270.50 -2.17%
கிராஸிம் 5,186.35 -1.89%
பிபிசிஎல் 595.65 -1.83%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ