Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் இந்தியப் பங்குச் சந்தை!

காலை 10.35 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (10.08.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
நேற்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் ரகுராம் ராஜன் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை. இதன் காரணமாகவும், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்த காரணத்தினாலும் பங்குச் சந்தை இறக்கத்தை சந்தித்தது. இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத் துவக்கத்தின் போது சர்வதேச சந்தை சாதகமாக இருந்த காரணத்தினால் இந்தியப் பங்குச் சந்தை 50 புள்ளிகள் வரை ஏற்றத்தை சந்தித்தது. எனினும் இது வெகுநேரம் நீடிக்கவில்லை. முதலீட்டாளர்கள் அதிகளவில் வங்கிப் பங்குகளை விற்று வருவதால் சந்தை இறக்கத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 190.16 புள்ளிகள் குறைந்து 27,893.13 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 67.15 புள்ளிகள் குறைந்து 8610.15 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அதானி துறைமுகங்கள் 253.65 5.80%
டிசிஎஸ் 2,669.70 0.74%
ஜீ மகிழ்விக்க 514.75 0.48%
பஜாஜ் ஆட்டோ 2,879.75 0.45%
போஷ் 25,477.50 0.39%
 
விலை குறைந்த பங்குகள்
 
கிராஸிம் 4,894.00 -5.64%
லூபின் 1,559.85 -2.95%
இன்டஸ் இன்ட் வங்கி 1,161.75 -2.07%
ஏசிசி 1,653.85 -1.90%
ரிலையன்ஸ் 1,011.30 -1.88%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ