Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

300 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிவு; ஏன்?

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (10.08.16) மாலை நேர வர்த்தகத்தில் அதிக இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
இன்றைய காலை நேர வர்த்தகத் துவக்கத்தின் போது சர்வதேச சந்தை சாதகமாக இருந்த காரணத்தினால் இந்தியப் பங்குச் சந்தை 50 புள்ளிகள் வரை ஏற்றத்தை சந்தித்தது. எனினும் இது வெகுநேரம் நீடிக்கவில்லை. முதலீட்டாளர்கள் அதிகளவில் வங்கிப் பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் சந்தை அதிகளவில் இறக்கத்தைச் சந்தித்தது.
 
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாது என்ற நம்பிக்கையால் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க பங்குச் சந்தை அதிக ஏற்றத்துடன் முடிவடைந்தது. இதன் தாக்கத்தினால் ஆசிய பங்குச் சந்தைகளும் எழுச்சியுடன் வர்த்தகமாகி வந்தன. 
 
ஆசியப் பங்குச் சந்தைகள் சாதகமாக இருந்தபோதிலும், இந்தியப் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சந்தையின் சமீபத்திய மதிப்பீடு அதிகமாக இருப்பதாக முதலீட்டாளர்கள் கருதியதால் பங்குச் சந்தை அதிக சரிவைச் சந்தித்துள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 310.28 புள்ளிகள் குறைந்து 27,774.88 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 102.95 புள்ளிகள் குறைந்து 8575.30 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அதானி துறைமுகங்கள் 258.45 7.80%
பேங்க் ஆப் பரோடா 160.40 1.23%
டிசிஎஸ் 2,675.40 0.95%
யெஸ் பேங்க் 1,267.40 0.60%
ஜீ எண்டர்டெயின் 515.00 0.53%
 
விலை குறைந்த பங்குகள்
 
கிராஸிம் 4,843.50 -6.61%
ஐடியா செல்லுலார் 92.95 -4.32%
ஏசிசி 1,618.90 -3.98%
லூபின் 1,544.40 -3.91%
அம்புஜா சிமென்ட்ஸ் 260.45 -3.72%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP