Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காலாண்டு முடிவுக்காக சந்தை தடுமாற்றம்?

காலை 10.15 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (11.08.16) காலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது.
 
நேற்று ஆசியப் பங்குச் சந்தைகள் சாதகமாக இருந்தபோதிலும், இந்தியப் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சந்தையின் சமீபத்திய மதிப்பீடு அதிகமாக இருப்பதாக முதலீட்டாளர்கள் கருதியதால் பங்குச் சந்தை அதிக சரிவைச் சந்தித்தது. இந்த நிலையில் இன்றைய வர்த்தகம் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது. 
 
கடந்த 2 நாட்களாக முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்ததால் சந்தை சரிந்து காணப்பட்டது. ஆசிய பங்குச் சந்தைகள் கூட ஏற்ற, இறக்கத்தில் காணப்படுகிறது. எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பிஹெச்இஎல், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, பிபிசிஎல், ஐஓசிஎல், ஹெச்பிசிஎல் மற்றும் சன் பார்மா போன்ற பெரிய நிறுவனங்கள் முடிவுகளை முதலீட்டாளர்கள் ஆவலுடன் காத்திருப்பதால் சந்தை ப்ளாட் ஆக வர்த்தகமாகிறது. இந்நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளின் அடிப்படையில் சந்தை ஏற்ற, இறக்கத்தை சந்திக்கும் என கூறப்படுகிறது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 18.87
புள்ளிகள் குறைந்து 27,7793.67 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 4.45 புள்ளிகள் குறைந்து 8570.35 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐடிசி 250.00 1.42%
ஐடியா செல்லுலார் 94.10 1.24%
டிசிஎஸ் 2,708.00 1.22%
பிபிசிஎல் 590.40 1.17%
ரிலையன்ஸ் 1,014.60 1.09%
 
விலை குறைந்த பங்குகள்
 
பேங்க் ஆப் பரோடா 147.30 -8.17%
சன் பார்மா 786.95 -3.75%
கிராஸிம் 4,708.00 -2.80%
யெஸ் பேங்க் 1,240.60 -2.11%
டாடா மோட்டார்ஸ் (டி) 326.90 -1.98%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ