Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அந்நிய முதலீட்டால் அதிகரித்த சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (11.08.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்தில் முடிவடைந்தது.  
கடந்த ஏழு வாரங்களில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச் சந்தைகள் நேற்று சரிவைச் சந்தித்தன. லாபத்தை வெளியே எடுக்கும் போக்கு அதிகமாக இருந்ததால் சந்தையில் சரிவு ஏற்பட்டது. அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து முடிவடைந்தன. இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகம் ப்ளாட் ஆக ஆரம்பித்தது. அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் அதிகளவில் இந்தியச் சந்தையில் முதலீடுகளை மேற்கொண்டது, முதலீட்டாளர்கள் ஆர்வமாக ப்ளூ சிப் நிறுவனத்தின் பங்குகள் வாங்கி குவிப்பு போன்ற காரணங்களால் சந்தை இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் ஏற்றத்தில் முடிவடைந்தது.
 
நாளை ஜூன் மாத ஐஐபி டேட்டா மற்றும் ஜூலை மாத சில்லறை பணவீக்க டேட்டா வெளியாக உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 84.72 புள்ளிகள் உயர்ந்து 27,859.60 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 16.85 புள்ளிகள் உயர்ந்து 8592.15 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 95.45 2.69%
எய்கர் மோட்டார்ஸின் 22,268.30 2.43%
லூபின் 1,580.50 2.34%
பிபிசிஎல் 596.85 2.28%
ஐடிசி 251.65 2.09%
 
விலை குறைந்த பங்குகள்
 
பேங்க் ஆப் பரோடா 145.95 -9.01%
கிராஸிம் 4,539.60 -6.27%
பார்தி இன்ப்ராடெல் 368.00 -2.74%
ஜீ மகிழ்விக்க 501.50 -2.62%
ஹிண்டால்கோ 142.25 -2.43%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP