Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமிதாப்பை மிஞ்சி விட்டார் மோடி!

2009-ல் ட்விட்டர் கணக்கு தொடங்கிய மோடி மிகக் குறைவான ஃபாலோயர்களையே கொண்டிருந்தார். ஆனால் 2010-ல் கணக்கு தொடங்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதா பச்சன் மோடியைக் காட்டிலும் அதிக ஃபாலோயர்களை சில ஆண்டுகளிலேயே அள்ளினார்.

2014-ல் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட நரேந்திர மோடி ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்று இளைஞர்களைக் கவரும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி தன்னுடைய இமேஜை மக்கள் மத்தியில் உயர்த்திக்கொண்டார்.

முன்பு யாரென்றே பலருக்கு தெரியாமல் இருந்தவர் மிகவும் பிரபலமடைந்தார். தற்போது அமிதாப்பையே மிஞ்சி விட்டார். (11.8.2016, இரவு 11 மணி நிலவரப்படி, நரேந்திர மோடி- 2,18,40,914; அமிதாபச்சன்- 2,18,33,619)

மேலும் இந்தியாவில் அதிக ட்விட்டர் ஃபாலோவர்களைக் கொண்ட பத்து பேரில் இவர் மட்டும்தான் அரசியல் பிரமுகர், மற்ற ஒன்பது பேரும் நடிகர், நடிகைகள்.

ட்விட்டரில் அதிக ஃபாலோவர்களைக் கொண்ட டாப் 10 இந்திய நபர்கள்
  • நரேந்திர மோடி @narendramodi.
  • அமிதாப் பச்சன் @SrBachchan.
  • ஷாருக்கான் @iamsrk.
  • சல்மான் கான் @BeingSalmanKhan.
  • ஆமிர் கான் @aamir_khan.
  • தீபிகா படுகோன் @deepikapadukone.
  • பிரியங்கா சோப்ரா @priyankachopra.
  • ஹிருத்திக் ரோஷன் @iHrithik

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ