Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய சந்தையால் இந்திய பங்குச் சந்தை அதிகரிப்பு!

காலை 10.00 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (12.08.16) காலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 
 
நேற்றைய வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் அதிகளவில் இந்தியச் சந்தையில் முதலீடு மற்றும் முதலீட்டாளர்கள் ஆர்வமாக ப்ளூ சிப் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி குவிப்பு போன்ற காரணங்களால் சந்தை வர்த்தகத்தின் இறுதியில் ஏற்றத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று ஆசிய பங்குச் சந்தைகள் அதிகரித்து வருவதால் இந்தியப் பங்குச் சந்தைகள் அதிகரித்து காணப்படுகிறது. இதுமட்டுமின்றி இன்று ஜூன் மாத ஐஐபி டேட்டா மற்றும் ஜூலை மாத சில்லறை பணவீக்க டேட்டா வெளியாக உள்ளதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 265.66 புள்ளிகள் உயர்ந்து 28,127.72 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 74.95 புள்ளிகள் உயர்ந்து 8667.25 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹிண்டால்கோ 146.50 2.99%
யெஸ் பேங்க் 1,282.95 2.43%
ஆக்சிஸ் வங்கி 582.90 2.31%
டாடா மோட்டார்ஸ் 514.70 2.28%
பேங்க் ஆப் பரோடா 148.60 1.82%
 
விலை குறைந்த பங்குகள்
 
கிராஸிம் 4,456.95 -1.82%
பிபிசிஎல் 591,65 -0.87%
போஷ் 24,565.65 -0.87%
டாடா பவர் 74.15 -0.67%
டாக்டர் ரெட்டிஸ் லேபராட்டரி 2,996.15 -0.49%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ