Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரத்தின் இறுதிநாளில் சென்செக்ஸ் சரவெடி!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (12.08.16) மாலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
வாரத்தின் இறுதி நாளான இன்று ஆசிய பங்குச் சந்தைகள் அதிகரித்து வந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் காலை நேர வர்த்தகத்தில் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜூன் மாத ஐஐபி டேட்டா மற்றும் ஜூலை மாத சில்லறை பணவீக்க டேட்டா வெளியாக உள்ளதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
எனினும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பேங்க் ஆப் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பை மிஞ்சி வெளியானதால் இந்நிறுவனத்தின் பங்குகள் அதிகளவில் உயர்ந்தது. இதன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 292.80 புள்ளிகள் உயர்ந்து 28,152.40 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 80.00 புள்ளிகள் உயர்ந்து 8,672.15 என்ற நிலையில் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
எஸ்பிஐ 243.30 7.11%
ஆக்சிஸ் வங்கி 591.00 3.73%
யெஸ் பேங்க் 1,290.70 3.05%
ஹிண்டால்கோ 146.35 2.88%
டாடா மோட்டார்ஸ் 516.80 2.69%
 
விலை குறைந்த பங்குகள்
 
பிபிசிஎல் 579.95 -2.83%
ஐடியா செல்லுலார் 93.95 -1.57%
சிப்லா 515.95 -1.53%
இன்போசிஸ் 1,062.55 -1.37%
டெக் மஹிந்திரா 493.35 -1.35%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ