Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேக்ரோ எக்னாமிக் டேட்டாவால் சரிந்த சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (16.08.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய வர்த்தகம் இறக்கத்தில் நிறைவடைந்துள்ளது. கடந்த வெள்ளியன்று வெளியான மேக்ரோ எக்னாமிக் டேட்டாவான ஐஐபி மற்றும் சிபிஐ டேட்டா பலவீனம் மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச் சந்தை இறக்கத்தில் நிறைவடைந்துள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 87.79 புள்ளிகள் சரிந்து 28,064.61 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 29.60 புள்ளிகள் சரிந்து 8,642.55 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
சிப்லா 554.15 7.40%
அதானி துறைமுகங்கள் 273.55 5.92%
ஹிண்டால்கோ 154.65 5.67%
பிபிசிஎல் 596.40 2.84%
அம்புஜா சிமென்ட்ஸ் 269.65 1.95%
 
விலை குறைந்த பங்குகள்
 
பார்தி இன்ப்ராடெல் 350.05 -4.38%
ஹெச்சிஎல் டெக் 792.35 -2.68%
சன் பார்மா 782.70 -2.23%
போஷ் 24,002.90 -2.22%
டெக் மஹிந்திரா 482.95 -2.11%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ