Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய பங்குச் சந்தைகள் முன்னேற்றம்!

காலை 10.10 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (18.08.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
நேற்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் மின்சாரம், ஐடி மற்றும் எஃப்எம்சிஜி துறையின் பங்குகள் அதிகளவில் விற்பனை ற்றும் சர்வதேச சந்தை மந்தம் போன்ற காரணங்களால் சந்தை இறக்கத்தில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய வர்த்தகம் சர்வதேச சந்தை மற்றும் ஆசிய சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவதால் இந்திய சந்தையும் அதிகரித்து வருகிறது. 
 
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறித்த அறிவிப்பில் வாக்களிக்கும் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தை நேற்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் ஏற்றத்தில் முடிவடைந்தது. இதன் தாக்கத்தினால் ஆசிய பங்குச் சந்தைகளும், இந்திய பங்குச் சந்தைகளும் அதிகரித்து காணப்படுகிறது.  
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 114.71 புள்ளிகள் உயர்ந்து 28,120.83 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 37.30 புள்ளிகள் உயர்ந்து 8,664.80 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 179.70 2.89%
அதானி துறைமுகங்கள் 274.90 2.71%
இன்டஸ் இன்ட் வங்கி 1,184.45 2.68%
பேங்க் ஆப் பரோடா 154.05 1.78%
ஐசிஐசிஐ வங்கி 250.80 1.29%
 
விலை குறைந்த பங்குகள்
 
கோல் இந்தியா 341.95 -1.68%
லார்சன் 1,486.70 -1.05%
டாடா ஸ்டீல் 387.90 -1.01%
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,103.55 -0.90%
பார்தி இன்ப்ராடெல் 346.10 -0.75%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ