Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விரைவில் பிஎஃப் பணத்தில் வீடு!

பிஎஃப் கணக்கில் இருக்கும் இருப்பைப் பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை விரைவில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கொண்டு வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்தத் திட்டத்தில் வீடு வாங்க விரும்பும் சந்தாதார்களுடன் வங்கிகள், நிதி நிறுவனங்கள், மனைக் கட்டும் நிறுவனங்கள், ஊழியர்கள் வைப்பு நிதி அமைப்பு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. எதிர்கால பிஎஃப் தொகையில் இருந்து வீட்டுக் கடனை தவனை முறையிலும் செலுத்திக் கொள்ளவும் இந்தத் திட்டம் பரிந்துரை செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ