Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கி, மெட்டல் பங்குகளால் சந்தை அதிகரிப்பு!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (18.08.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறித்த அறிவிப்பில் வாக்களிக்கும் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவியது. அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த நிலவரம் நன்றாக உள்ளதாக உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். வட்டி விகிதம் அதிகரிப்பது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் அமெரிக்க பங்குச் சந்தை நேற்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் ஏற்றத்தில் முடிவடைந்தது. இதன் தாக்கத்தினால் ஆசிய பங்குச் சந்தைகளும், இந்திய பங்குச் சந்தைகளும் அதிகரித்தது. இதுமட்டுமின்றி வங்கி மற்றும் மெட்டல் பங்குகள் அதிகரித்ததால் இந்தியப் பங்குச் சந்தை அதிகரித்து காணப்பட்டது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 118.07 புள்ளிகள் உயர்ந்து 28,123.44 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 49.20 புள்ளிகள் உயர்ந்து 8,673.25 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,874.35 4.73
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 182.00 4.21
இன்டஸ் இன்ட் வங்கி 1,194.60 3.56
என்டிபிசி 166.80 3.25
அதானி துறைமுகங்கள் 275.45 2.91
 
விலை குறைந்த பங்குகள்
 
கோல் இந்தியா 339.05 -2.52%
லார்சன் 1,482.10 -1.36%
டாடா பவர் 76.90 -1.35%
டாடா ஸ்டீல் 387.20 -1.19%
டெக் மஹிந்திரா 469.50 -1.09%
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close