Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணமில்லா பரிவர்த்தனையின் பயன்பாடு பலேபலே!

நம் நாட்டின் 70வது சுதந்திர தினத்தன்று கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற பணமில்லா பரிவர்த்தனைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கையின் வாயிலாக பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் முதன் முறையாகப் பெரிய நகரங்களில் சுதந்திர தின விற்பனையின் போது 55% முதல் 60% வரை பணமில்லா பரிவர்த்தனை மூலம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனையே வாங்கிக் குவித்துள்ளனர். பணமில்லா பரிவர்த்தனைகள் பயன்பாட்டில் 18 முதல் 24 வயதிற்கு உட்பட்ட வாடிக்கையாளர்களே 50 சதவிகிதம் வரை மேற்கொண்டு வருகின்றனர்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ