Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (19.08.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறித்த அறிவிப்பில் வாக்களிக்கும் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதன் தாக்கத்தினால் இந்திய பங்குச் சந்தை நேற்று அதிகரித்தது. இந்த நிலையில் வாரத்தின் இறுதிநாளான இன்று சந்தை காலை நேரத்திலிருந்தே ப்ளாட் ஆக வர்த்தகமானது. எனினும் எஸ்பிஐ உட்பட சில நிறுவனத்தின் பங்குகள் விலை மட்டும் அதிகரித்து காணப்பட்டது. 
 
இன்றைய சந்தையைப் பொறுத்தவரை நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ மத்திய வங்கி அதிகாரிகள் வரும் மாதங்களில் வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து வலியுறுத்தி வந்தனர். இதன் தாக்கத்தினால் இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் நிறைவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 46.44 புள்ளிகள் குறைந்து 28,077.00 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 6.35 புள்ளிகள் குறைந்து 8,666.90 என்ற நிலையில் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பேங்க் ஆப் பரோடா 161.65 4.63%
எஸ்பிஐ 258.50 4.07%
ஹிண்டால்கோ 158.95 2.98%
அம்புஜா சிமென்ட்ஸ் 276.45 1.60%
ஆரோபிந்தோ பார்மா 765.05 1.51%
 
விலை குறைந்த பங்குகள்
 
எய்கர் மோட்டார்ஸின் 21,777.30 -1.79%
பார்தி Infratel 342.35 -1.58%
கோல் இந்தியா 334.15 -1.45%
டிசிஎஸ் 2,603.50 -1.33%
விப்ரோ 520.10 -0.95%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ