Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் படேல் நியமனம்!

 

 
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.   அடுத்த  3 ஆண்டுகாலத்துக்கு ரிசர்வ் வங்கி கவர்னராக பதவி வகிப்பார்.  
 
 
இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் கவர்னராக உள்ள ரகுராம் ராஜனின் பதவிக் காலம் வரும் செப்டம்பர் 4 ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக  ரகுராம் ராஜன் கவர்னர் பதவியில் தொடர விருப்பமில்லை எனக் கூறியிருந்தார். 
 
இதனைத் தொடர்ந்து மத்திய அரசும் புதிய கவர்னரை நியமிக்க காலம் தாழ்த்தி வந்தது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக பிரதமரின் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன், பாரத ஸ்டேட் வங்கி அருந்ததி பட்டாச்சார்யா உட்பட பலருடைய பேர் அடிபட்டது. 
 
இந்த நிலையில் பல்வேறு யூகங்களுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கியின் தற்போதைய துணை கவர்னராக இருக்கும் உர்ஜித் படேல், புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். 52 வயதாகும் உர்ஜித் படேல் அடுத்த 3 ஆண்டுகாலத்துக்கு ரிசர்வ் வங்கி கவர்னராக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ