Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரத்தின் முதல் நாள் இறக்கத்தில் சந்தைகள்!

 
காலை 10.20 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (22.08.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ மத்திய வங்கி அதிகாரிகள் வரும் மாதங்களில் வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து வலியுறுத்தி வந்தனர். இதன் தாக்கத்தினால் வாரத்தின் இறுதி நாளான கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இன்றைய காலை நேர வர்த்தகம் ப்ளாட் ஆக ஒபன் ஆகி பின் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்109.95 புள்ளிகள் குறைந்து 27,979.92 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 36.55 புள்ளிகள் குறைந்து 8,630.15 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
எச்யூஎல் 933.40 2.50%
பிபிசிஎல் 600.60 1.25%
ஐடிசி 253.85 1.16%
யெஸ் பேங்க் 1,345.95 0.75%
பி.எச்.இ.எல் 143.05 0.74%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஹிண்டால்கோ 155.55 -2.14%
பேங்க் ஆப் பரோடா 158.20 -2.13% 
லூபின் 1,544.15 -2.02%
சன் பார்மா 768.90 -1.90%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,856.85 -1.78%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ