Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிசிஎஸ், இன்போசிஸ் பங்குகளால் சரிவிலிந்து மீண்ட சென்செக்ஸ்!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (23.08.16) மாலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆக வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
சர்வதேச சந்தை மந்தமாக வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச் சந்தைகளும் இறக்கத்துடன் வர்த்தகமாகி வந்தது. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் குறிப்பாக இன்போசிஎஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிக் குவித்ததால் சரிவிலிருந்த சென்செக்ஸ் அதிகரித்து இறுதியில் ப்ளாட் ஆக நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக், ஐடியா செல்லுலர் நிறுவனத்தின் பங்குகள் அதிகரித்து காணப்பட்டது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 4.67 புள்ளிகள் உயர்ந்து 27,990.21 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 3.45 புள்ளிகள் உயர்ந்து 8,632.60 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 101.00 6.88%
பேங்க் ஆப் பரோடா 164.30 2.66%
ஹெச்சிஎல் டெக் 791.00 2.43%
இன்போசிஸ் 1,039.65 2.38%
டிசிஎஸ் 2,601.05 2.05%
 
விலை குறைந்த பங்குகள்
 
பி.எச்.இ.எல் 136.90 -4.86%
BPCL 576.10 -3.58%
டாடா பவர் 74.80 -2.92%
என்டிபிசி 159.00 -2.84%
ஆரோபிந்தோ பார்மா 736.60 -1.81%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ