Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷார்ட் கவரிங் நடவடிக்கையால் சந்தை அதிகரிப்பு!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (24.08.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 118 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 4.67 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 118.18 புள்ளிகள் உயர்ந்தது. ஐ.டி, தொழில்நுட்பம், எண்ணெய் & எரிவாயு மற்றும் ஆட்டோ போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டன.
 
இந்த நிலையில் சர்வதேச சந்தைகள் மந்த நிலைக்கு மத்தியிலும் இந்திய சந்தையில் முதலீட்டாளர்கள் ஆட்டோ, டெக் மற்றும் ஐடி நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் குவித்ததால் சென்செக்ஸ் மீண்டும் 28,000 என்ற நிலையை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி நாளை எஃப் அண்ட் ஒ எக்ஸ்பியரி என்பதால் முதலீட்டாளர்கள் பொசிஷனை சார்ட் கவரிங் செய்து வருவதால் அதாவது ஏற்கனவே விற்பனை செய்த எஃப் அண்ட் ஒ ஆப்சனை  இன்று மீண்டும் வாங்கத் தொடங்கியதால் பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிவடைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 69.73 புள்ளிகள் உயர்ந்து 28,059.94 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 17.70 புள்ளிகள் உயர்ந்து 8,650.30 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அரவிந்தர் ஃபார்ம் 787.80 6.95%
மாருதி சுசூகி 4,948.55 2.37%
டாடா பவர் 76.45 2.21%
சிப்லா 567.20 2.08%
இன்போசிஸ் 1,057.40 1.71%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 98.35 -2.62%
லூபின் 1,521.70 -2.20%
டாடா மோட்டார்ஸ் (டி) 322.90 -1.52%
அம்புஜா சிமென்ட்ஸ் 267.10 -1.44%
டாடா ஸ்டீல் 379.95 -1.35%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ