Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 220 புள்ளிகள் சரிந்தது! ஜேனட் யெல்லென் சமிக்ஞை தெரிவிப்பாரா?

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (25.08.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
இன்றைய காலை நேர வர்த்தகத்தின்போது ஆகஸ்ட் மாத எஃப் அண்ட் ஒ எக்ஸ்பியரி என்பதால் முதலீட்டாளர்கள் பொசிஷனை சார்ட் கவரிங் செய்தனர். இதன் காரணமாக பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வந்தது. இந்த நிலையில் அமெரிக்கா, ஜாக்சன் ஹோலில் உள்ள உலக மத்திய வங்கியாளர்கள் மாநாட்டில் மத்திய வங்கியின் தலைவர் ஜேனட் யெல்லென் முக்கிய உரை நிகழ்த்த உள்ளார். இந்த உரையில் யெல்லேன் நிதிக்கொள்கை குறித்து சமிக்ஞை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 224.03 புள்ளிகள் குறைந்து 27,835.91 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 58.10 புள்ளிகள் குறைந்து 8,592.20 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பி.எச்.இ.எல் 140.90 3.00%
பிபிசிஎல் 598.25 2.84%
கெயில் 373.10 2.07%
ஐடிசி 253.45 1.28%
ஹெச்சிஎல் டெக் 798.05 0.97%
 
விலை குறைந்த பங்குகள்
 
அதானி துறைமுகங்கள் 261.75 -3.09%
விப்ரோ 504.00 -3.01%
ஐடியா செல்லுலார் 95.65 -2.75%
பார்தி இன்ப்ராடெல் 339.35 -2.11%
ஜீ மகிழ்விக்க 510.80 -2.11%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ