Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டாளர்கள் உஷார்.. சென்செக்ஸ் சர்ர்ர்!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (26.08.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 224.03 புள்ளிகளாக குறைந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.81 புள்ளிகள் உயர்ந்து 27,920.72 புள்ளிகளாக உள்ளது. நுகர்வோர் சாதனங்கள், உலோகம் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டன. 
 
இந்த நிலையில் இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு அமெரிக்காவில், அந்நாட்டின் மத்திய வங்கித் தலைவர் ஜெனேட் யெல்லேன் தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது குறித்து யெல்லேன் சமிக்ஞைகள் தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் உஷாராக வர்த்தகம் மேற்கொண்டு வருவதால் சந்தை சரிவில் முடிவடைந்துள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 53.66 புள்ளிகள் குறைந்து 27,782.25 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 19.65 புள்ளிகள் குறைந்து 8,572.55 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா மோட்டார்ஸ் (டி) 329.55 3.31%
பார்தி இன்ப்ராடெல் 346.85 2.21%
டாடா மோட்டார்ஸ் 503.75 2.00%
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,123.30 1.57%
ரிலையன்ஸ் 1,027.90 1.50%
 
விலை குறைந்த பங்குகள்
 
விப்ரோ 490.00 -2.78%
ஹெச்சிஎல் டெக் 778.75 -2.42%
பேங்க் ஆப் பரோடா 158.30 -2.25%
லார்சன் 1,427.20 -1.89%
ஐடியா செல்லுலார் 93.95 -1.78%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ