Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி!

 
இந்த வாரம் மஞ்சள், சீரகம், சோயாபீன்ஸ் விலைப்போக்கு குறித்து அலைஸ் புளூ நிறுவனத்தின் தலைவர் கே.ராஜேஷ் விளக்குகிறார். 
 
மஞ்சள்!
 
என்சிடிஎக்ஸ் சந்தையில் மஞ்சள் செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் கடந்த வாரம் அதிகபட்சமாக 7,790 என்ற விலையிலும், குறைந்தபட்சமாக 7,242 என்ற விலையிலும் வர்த்தகமானது. மூன்று வாரத்துக்குமுன் 8,222-ஆக இருந்த மஞ்சள் விலை ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் உற்பத்தி அதிகரித்து காணப்படுவதால், இதன் விலை 7,242 வரை சரிவடைந்தது.
 
பருவமழை சாதகமாக இருப்பதால், கடந்த ஆண்டைவிட தெலங்கானா பகுதிகளில் மஞ்சள் உற்பத்தி 17% வரை அதிகரித்து காணப்படுகிறது. ஆகையால் வரும் நாட்களில் என்சிடிஎக்ஸ் சந்தையில் மஞ்சளின் விலையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
 
எனினும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தையில் மஞ்சளின் தேவை நிலையாகவே உள்ளது. டெக்னிக்கல் சார்ட்படி மஞ்சள் 7,000ல் நல்ல சப்போர்ட் நிலையில் உள்ளது.
 
சீரகம்!
 
என்சிடிஎக்ஸ் சந்தையில் சீரகம் செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் அதிகபட்சமாக 18,690 என்ற விலையிலும், குறைந்தபட்சமாக 18,070 என்ற விலையிலும் கடந்த வாரம் வர்த்தகமானது.
 
உள்நாட்டு சந்தையில் தேவை குறைந்ததால், இந்த வாரம் சீரகம் விலை சரிவை சந்தித்தது. ஆனால், சீரகம் விநியோகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஏனெனில் சீரகம் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் எந்த ஒரு பெரிய முன்னேற்றமும் இல்லை.
 
உள்நாட்டுச் சந்தையில் சீரகத்தின் தேவை குறைந்து வருவதால், வரும் வாரங்களில் இதன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
டெக்னிக்கல் சார்ட்படி, வரும் நாட்களில் சீரகம் விலை 18,050 உடைத்தெரியும்பட்சத்தில் 17,550 வரை வரும் என்று எதிர்பார்க்கலாம். 
 
சோயாபீன்ஸ்!
 
என்சிடிஎக்ஸ் சந்தையில் சோயாபீன்ஸ் செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் அதிகபட்சமாக 3,499 என்ற விலையிலும், குறைந்தபட்சமாக 3,388 என்ற விலையிலும் கடந்த வாரம் வர்த்தகம் ஆனது.
 
இந்தியாவில் சோயாபீன்ஸ் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி சந்தையில் இதன் தேவை குறைந்து வருவதால் வரும் வாரங்களில் சோயாபீன்ஸ் விலை குறைய வாய்ப்புள்ளது.
 
குறிப்பாக, வெளிநாடுகளில் சோயாபீன்ஸ் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்து வருவதால், இந்தியாவின் சோயாபீன்ஸ் ஏற்றுமதி குறைந்து வருகிறது.
 
இதனால், என்சிடிஎக்ஸ் சந்தையில் சோயாபீன்ஸ் விலை வரும் நாட்களில் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சோ.கார்த்திகேயன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ