Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச சந்தையால் இந்திய பங்குச் சந்தை அதிகரிப்பு!

காலை 10.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (30.08.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தின்போது அமெரிக்காவின் மத்திய வங்கி தலைவர் ஜெனேட் யெல்லேன் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு, லார்ஜ் கேப் பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி குவிப்பு மற்றும் டாட்டா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகளவில் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சந்தை அதிகரித்து முடிவடைந்தது. 
 
இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சர்வதேச சந்தை அதிகரித்து காணப்படுவதால் இந்தியப் பங்குச் சந்தை எழுச்சியுடன் வர்த்தகமாகி வருகிறது. இதுமடுமின்றி ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கையில் இந்திய பொருளாதாரம் 2016-17ம் நிதியாண்டில் 7.6 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்ற அறிவிப்பால் சந்தை அதிகரித்து காணப்படுகிறது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 212.27 புள்ளிகள் உயர்ந்து 28,114.46 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 67.90 புள்ளிகள் உயர்ந்து 8,675.95 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
மாருதி சுசூகி 5,064.00 2.77
பஜாஜ் ஆட்டோ 2,966.00 2.71
ஹெச்சிஎல் டெக் 771.50 2.17
டெக் மஹிந்திரா 459.10 2.12
யெஸ் பேங்க் 1,366.70 2.10
 
விலை குறைந்த பங்குகள்
 
பார்தி ஏர்டெல் 338.60 -1.17%
ஜீ மகிழ்விக்க 527.45 -0.50%
டாடா மோட்டார்ஸ் (டி) 337.05 -0.27%
பார்தி Infratel 337.30 -0.22%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ