Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து அதிகரிப்பு!

காலை 9.55 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (31.08.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
அடுத்த மாதம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் வாய்ப்புகள் குறித்து முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பால் சர்வதேச சந்தை மற்றும் ஆசிய பங்குச் சந்தை அதிகரிப்பு, அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் அதிகளவில் முதலீடு மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் இந்திய பொருளாதாரம் 2016-17ம் நிதியாண்டில் 7.6 சதவிகிதம் வரை வளர்ச்சியடையும் என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் நேற்று அதிரடியாக 440 புள்ளிகள் வரை அதிகரித்து காணப்பட்டது.
 
இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத்திலும் இந்தியப் பங்குச் சந்தை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வங்கிப் பங்குகள், சிப்லா, ஐடிசி, விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி மற்றும் சன் பார்மா பங்குகள் அதிகரித்து காணப்படுகிறது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 135.65 புள்ளிகள் உயர்ந்து 28,476.52 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 52.40 புள்ளிகள் உயர்ந்து 8,795.90 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அல்ட்ராடெக் சிமெண்ட் 4,013.95 3.14%
ஹீரோ மோட்டோகார்ப் 3,571.95 2.72%
டாடா மோட்டார்ஸ் 541.75 2.41%
கோடக் மகேந்திரா 803.25 2.18%
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,167.25 1.84%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஓஎன்ஜிசி 239.30 -0.99%
என்டிபிசி 160.35 -0.87%
டிசிஎஸ் 2,522.00 -0.87%
BPCL 603.35 -0.81%
இன்போசிஸ் 1,032.35 -0.77%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ