Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நகரப் பெண்களைவிட அதிக கடன் வாங்கும் கிராம பெண்கள்!

நகரத்துப் பெண்களை விட, கிராமத்துப் பெண்கள் அதிக கடன் கணக்குகளை வைத்திருப்பதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. 
 
 
2015ம் ஆண்டில், ஒவ்வொரு 100 கடன் கணக்குகளில் கிராமப்புற பெண்கள் 32 கடன் கணக்குகளை வைத்திருக்கின்றனர். ஆனால், நகர்ப்புற பெண்கள் 16 கடன் கணக்குகள் மட்டுமே வைத்திருக்கின்றனர். தற்போது, சிறிய கடன் கணக்கின் (small borrowal accounts) கீழ் ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
 
எஸ்பிஏ-ன் கீழ் கிராமப்புறத்தில், கணக்கு ஒன்றுக்குச் சராசரியாக 1999ம் ஆண்டு ரூ.18,000 ஆக இருந்த கடன் வாங்கும் போக்கு, 2015ல் ரூ.30,000 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் நகர்ப்புறத்தில், கணக்கு ஒன்றுக்குச் சராசரியாக 1999ம் ஆண்டு ரூ.32,000 ஆக இருந்த கடன் வாங்கும் போக்கு, 2015ல் ரூ.19,000 ஆகக் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ