Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிரடி ஆஃபரால் ரிலையன்ஸ் பங்குகள் அதிகரிப்பு!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (01.09.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 66 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த மூன்று நாள் வர்த்தகத்தில் குறியீடு 669.92 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சரிவில் முடிவடைந்தது. 
 
இன்றைய வர்த்தகத்தின் இடையே ரிலையன்ஸ் ஆண்டுக்கூட்டத்தில் அதிரடி ஆஃபர்களை முகேஷ் அம்பானி அறிவித்தார். அதில் நாடு முழுவதும் இலவச மொபைல் அழைப்புகள், ரோமிங்க் கட்டணம் ரத்து, 4ஜி இணையத்தில் 1 ஜிபி பயன்பாட்டுக்கு ரூ. 50 கட்டணம்,  மாணவர்களுக்கு கூடுதலாக 25 சதவித இணைய பயன்பாடு இலவசம், முதல் 4 மாதங்களுக்கு மட்டும் இலவச இணைய பயன்பாடு, ரூ. 19-ல் இருந்து மொபைல் திட்டங்கள், குறைவாக பயன்படுத்துவோருக்கு அடிப்படை திட்டம் மாதத்துக்கு ரூ. 149, அதிக அளவு இணையம் உபயோகிப்போருக்கு மாதத்துக்கு ரூ. 4,999 வரை மற்றும் ரிலையன்ஸின் 'லைஃப்' பிராண்ட் மொபைல்கள் ரூ.2,999-ல் இருந்து விற்பனையாகும் என்று முகேஷ் அம்பானி அறிவித்தார். இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் ஏற்றம் கண்டன. அதே சமயம் மற்ற தொலைத்தொடர்புத்துறை நிறுவனத்தின் பங்குகள் விலையில் சரிவைச் சந்தித்தது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 28.69 புள்ளிகள் குறைந்து 28,423.48 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 11.55 புள்ளிகள் குறைந்து 8,774.65 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கெயில் 391.75 2.04%
ஹெச்டிஎப்சி 1,424.75 1.37%
கோல் இந்தியா 338.00 1.35%
லூபின் 1,501.75 1.32%
டாடா ஸ்டீல் 374.60 1.22%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 83.65 -10.49%
பார்தி ஏர்டெல் 310.85 -6.27%
ரிலையன்ஸ் 1,029.20 -2.91%
பி.எச்.இ.எல் 135.45 -2.62%
பிபசிஎல் 586.80 -2.62%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ