Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விலை குறைந்து வர்த்தகமாகும் ஐடியா செல்லூலர், ரிலையன்ஸ் பங்குகள்

 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றும்  (02.09.16) காலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது. 
11 .00 மணி நிலவரம்
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 57.99 புள்ளிகள் உயர்ந்து 28,481.47 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 13.15 புள்ளிகள் உயர்ந்து 8,782.25 என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
ஆட்டொமொபைல், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் போன்ற துறை சார்ந்த பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. மெட்டல் மற்றும் ஐடி துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
 
10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை 6 ரூபாய் அதிகரித்து 30,778 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை 122 ரூபாய் அதிகரித்து 44,420 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசா குறைந்து 66.83 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. 
 
ஆசிய சந்தைகளில் நிட்டி மற்றும் ஸ்ட்ரைட் டைம்ஸ், தைவான் இண்டெக்ஸ், ஷாங்காய் காம்போஸைட் போன்ற சந்தைகள் சற்றே இறக்கத்திலும், ஃப்ளாட்டாக மந்த நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது. ஹேங்சேங் சந்தை மட்டுமே குறிப்பிடும்படியாக நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.
 
ஐரோப்பிய சந்தைகள் நேற்று மந்தமாகவே வர்த்தகமாகி இருக்கின்றன என்பதும் இன்று இந்திய சந்தைகள் ஃப்ளாட்டாக வர்த்தகமாக காரணமாக இருக்கலாம் என்று அனலிஸ்டுகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
 
விலை அதிகரித்த பங்குகள் - விலை - அதிகரித்த சதவிகிதம்
அதானி போர்ட்ஸ் 266.70 3.09
மாருதி சுஸிகி 5,169.00 2.14
டாடா மோட்டார்ஸ் 554.45 1.99
டாடா மோட்டார்ஸ்  
(டிவிஆர்) 349.70 1.57
பேங்க் ஆஃப் பரோடா 163.20 1.21
 
விலை குறைந்த பங்குகள்
ஐடியா செல்லூலர் 81.20 -2.93
ரிலையன்ஸ்  1,008.60 -2.00
கோல் இந்தியா 331.90 -1.80
ஹிண்டால்கோ 154.85 -1.68
பஜாஜ் ஆட்டோ 2,951.95 -1.57
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ