Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

 

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

இந்த வாரம் சோயாபீன்ஸ், கடுகு, சோயா எண்ணெய் விலைப்போக்கு குறித்து ‘இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ்’ நிறுவனத்தின் முதன்மை மேலாளர் முருகேஷ் குமார் விளக்குகிறார். 
 

 

சோயாபீன்ஸ்! 
சோயாபீன்ஸ் உற்பத்தியாகும் பகுதியில் இதன் விளைச்சல் அதிகமாக இருப்பதால், என்சிடிஇஎக்ஸ் சந்தையில் சோயாபீன்ஸ் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் இந்த வாரம் சரிவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதுமட்டுமின்றி, வானிலை சாதகமாக இல்லாத காரணத்தினால் சிகாகோ வர்த்தக வாரியத்தில் (CBOT) சோயாபீன்ஸ் விலைச் சரிவைச் சந்தித்து வருகிறது.
இதனால் வரும் நாட்களில் சோயாபீன்ஸ் விலை குறைந்து 3,100 வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கடுகு!

எம்சிஎக்ஸ் சந்தையில் கடுகு கடந்த வாரத்தின் முதல் பாதியில் ஷார்ட் கவரிங் நடைபெற்றது. எனினும், ஸ்பாட் மார்க்கெட்டில் கடுகு விநியோகம் அதிகரிப்பு மற்றும் அதன் உற்பத்தியும் உயர்ந்து வந்தது.
 
இதனால் என்சிடிஇஎக்ஸ் சந்தையில் இந்த வாரம் கடுகு விலை சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
எனினும், இந்த வாரம் தினசரி வர்த்தகத்தில் 4,850-க்கு மேலே க்ளோஸ் ஆனால், சரிவைச் சந்தித்து வந்த கடுகு விலை மீண்டும் உயரத் தொடங்கலாம். 
 
 

சோயா எண்ணெய்: 

சோயாபீன்ஸ் விலை சரிவைச் சந்தித்துவரும் நிலையிலும் சோயா எண்ணெய் பரவலாக வர்த்தகமாகி வருகிறது.

எனினும், சர்வதேச அளவில் எண்ணெய் விலை பலவீனமாக இருப்பதால், கடந்த வாரம் சோயா எண்ணெய் விலை அதிகரிக்கவில்லை. சர்வதேச நிலவரத்தைப் போல, என்சிடிஇஎக்ஸ் சந்தையில் சோயா எண்ணெய் விலைப்போக்கு இந்த வாரம் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முருகேஷ் குமார்

சோயா எண்ணெய் விலையைப் பொறுத்தவரை, 625-ல் சப்போர்ட் நன்றாக உள்ளது. இதற்குக் கீழே தினசரி வர்த்தகத்தில் க்ளோஸ் ஆகும்பட்சத்தில் இதன் விலை மேலும் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சோ.கார்த்திகேயன்
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close