Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச் சந்தை உயர்வுக்கு 3 காரணங்கள்...

பங்குச் சந்தை உயர்வுக்கு 3 காரணங்கள்...
 
கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் உயர்ந்திருக்கிறது. சென்செக்ஸ் இன்று மட்டும் 445 புள்ளிகள் உயர்ந்து 28,978 புள்ளிகளையும் நிஃப்டி 133 புள்ளிகள் உயர்ந்து 8943 புள்ளிகளாக உயர்ந்திருக்கின்றன.  
 
இந்த உயர்வுக்கு மூன்று முக்கிய காரணங்கள் இதோ:

1. அமெரிக்காவில் வட்டி உயர்வு இப்போதைக்கு இல்லை!
 
அமெரிக்காவில் வட்டி உயர்வு இப்போதைக்கு இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அப்படியே இருந்தாலும் அது வருகிற டிசம்பர் மாதத்தில் இருக்கலாம். கடந்த வாரம் வெளியான விவசாயம் அல்லாத துறைகளில் வேலை வாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்கள் பாசிட்டிவ்-ஆக இல்லாததால், வட்டி விகிதம் கூடிய விரைவில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.
 
இதனை உணர்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் நம் பங்குச் சந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன.
 
2. அதிகரித்து வரும் வெளிநாட்டு முதலீடு!
 
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடானது நம் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் பங்குச் சந்தையில் 41,000 கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.  
 
இந்த முதலீடு இன்னும் தொடரும் என்கிற நம்பிக்கை  சந்தையில் ஏற்பட்டுள்ளது. 

3. நிக்கி பி.எம்.ஐ.!
 
நிக்கி இந்தியா சர்வீஸஸ் பர்ச்சேஸிங் மேனேஜர் இன்டெக்ஸ் ஜுலை மாதத்தைவிட ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்திருக்கிறது.
 
கடந்த 51.9-ஆக இருந்த நிக்கி பி.எம்.ஐ. கடந்த ஆகஸ்ட்டில் 54.7-ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்த மூன்று காரணங்களினால்தான் பங்குச் சந்தைகள் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன!
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ