Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெல் நிகர லாபம் 50% உயர்வு; பங்குகள் விலை 15% அதிகரிப்பு!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (07.09.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
இன்றைய காலை நேர வர்த்தக துவக்கத்தில் சர்வதேச சந்தை சாதகமாக இருந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகளும் சற்று ஏற்றத்தில் வர்த்தகமானது. எனினும் இது வெகுநேரம் நீடிக்கவில்லை. இன்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் அதிக உச்சத்தை எட்டி இருந்தது. பேங்க் ஆப் பரோடா, எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. முதலீட்டாளர்கள் லாபநோக்கில் பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய சந்தையில் சரிவில் முடிவடைந்துள்ளது. 
 
ஜூன் காலாண்டில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தின் நிகர லாபம் 54.2% உயர்ந்து ரூ.156.70 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 15% அதிகரித்து நிறைவடைந்தது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 51.66 புள்ளிகள் குறைந்து 28,926.36 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 25.05 புள்ளிகள் குறைந்து 8,91795 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
பி.எச்.இ.எல் 159.65 15.56%
பேங்க் ஆப் பரோடா 174.80 3.13%
ஓஎன்ஜிசி 244.95 2.68%
எஸ்பிஐ 266.80 2.58%
ஐசிஐசிஐ வங்கி 278.15 2.00% 
 
விலை குறைந்த பங்குகள்
 
யெஸ் பேங்க் 1,401.55 -2.72%
டாடா பவர் 76.70 -2.29%
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,177.20 -2.24%
ஹெச்டிஎப்சி 1,427.15 -2.12%
கெயில் 395.95 -1.80%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ