Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோதாவில் களமிறங்கும் எல் அண்ட் டி டெக்னாலஜிஸ்! முதலீடு பண்ணலாமா.. வேண்டாமா?

எல் அண்ட் டி நிறுவனத்தில் இருந்து கடந்த 2010-ம் ஆண்டு எல் அண்ட் டி டெக்னாலஜி நிறுவனம் பிரிக்கப்பட்டது. அப்போது எல் அண்ட் டி இன்டகரேடட் இன்ஜினீயரிங் சர்வீசஸ் என்னும் பெயரில் இந்த நிறுவனம் செயல்பட்டது. அதன் பிறகு 2012-ம் ஆண்டு எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.3,142 கோடியாக இருந்தது. 
 
 
இந்த நிலையில் எல் அண்ட் டி குழுமத்தின் எல் அண்ட் டி டெக்னாலஜிஸ் சர்வீசஸ் நிறுவனம் செப்டம்பர் 12-ல் புதிய பங்கு விற்பனையில் களமிறங்குகிறது. இதில் முதலீடு செய்யலாமா என்பது குறித்து கார்வி ஸ்டாக் புரோக்கிங், துணைத் தலைவர், ரெஜி தாமஸிடம் கேட்டோம். 
 
"எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் ஐபிஓவை நிச்சயம் வாங்கலாம். ஆனால், குறைந்தது 3, 5 ஆண்டுகள் ஐபிஒவை வாங்கி வைத்திருந்து காத்து இருக்க வேண்டும். எல் அண்ட் டி டெக்னாலஜியைப் பொறுத்தவரை அந்நிறுவனத்தின் நிலைத்தன்மை நன்றாக உள்ளது. எனினும் டெக்னாலஜிஸ் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நிலைமை தற்போது மோசமான நிலையில்தான் உள்ளது. இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களின் செயல்பாடுகளும் மந்த நிலையிலேயே காணப்படுகின்றன. 
 
இதுபோன்ற சூழ்நிலையில் எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் ஐபிஓவை வெளியிடும்போது அந்நிறுவனத்தின் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடக் கீழே இறங்க வாய்ப்பு இருக்கிறது. அதற்காக எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனம் சிறப்பாக செயல்படவில்லை என்று கூறமுடியாது. குறைந்தது 3 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். நீண்ட கால முதலீட்டிற்கு வாங்குவதாக இருந்தால் இப்போது ரூ.850 என்ற சரியான விலையில் உள்ளது, நிச்சயம் வாங்கிக் கொள்ளலாம்" என்றார். 
 
எல் அண்ட் டி குழுமத்தைச் சேர்ந்த எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்தின் ஐபிஒவுக்கு 11-மடங்குக்கு மேல் முதலீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்தன. இந்த நிலையில் எல் அண்ட் டி டெக்னாலஜி நிறுவனம் பொதுப் பங்கு வெளியிட (ஐபிஓ) உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
சோ.கார்த்திகேயன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ