Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச சந்தையால் இந்திய சந்தை ப்ளாட்!

காலை 10.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (08.09.16) காலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது.
 
நேற்றைய வர்த்தகத்தில் ஜூன் காலாண்டில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தின் நிகர லாபம் 54.2% உயர்ந்து ரூ.156.70 கோடியாக அதிகரித்ததால் இந்நிறுவனத்தின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 15% அதிகரித்து காணப்பட்டது. இன்றைய வர்த்தகத்தில் இதன் பங்குகள் சரிந்து காணப்படுகிறது. 
 
சர்வதேச சந்தைகள் பலவீனமாக இருப்பதால் இந்திய சந்தைகள் காலை நேர வர்த்தகத்துவக்கத்தின்போது ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 51.66 புள்ளிகள் உயர்ந்து 28,980.12 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 12.05 புள்ளிகள் உயர்ந்து 8,927.95 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
டாடா ஸ்டீல் 406.05 4.13%
பஜாஜ் ஆட்டோ 3,091.35 3.54%
பார்தி இன்ப்ராடெல் 358.70 2.68%
ஹீரோ மோட்டோகார்ப் 3,696.15 2.48%
ஓஎன்ஜிசி 250.65 2.33%
 
விலை குறைந்த பங்குகள்
 
டிசிஎஸ் 2,315.00 -5.14%
ஹெச்சிஎல் டெக் 766.00 -2.68%
யெஸ் பேங்க் 1,364.30 -2.66%
டெக் மஹிந்திரா 459.80 -2.55%
இன்போசிஸ் 1,028.85 -2.42%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ