Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிஎஸ்டி-க்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைச்சாச்சு! அடுத்தது?

ஜிஎஸ்டி மசோதா ஐக்கிய முற்போக்கு அரசால் கடந்த 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த மசோதாவை சில காரணங்களால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில் பாஜ அரசு வெற்றி பெற்று கடந்த ஆண்டு மே மாதம் இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. 
 
 
ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. காரணம் மக்களவையைப்போல், மாநிலங்களவையில் பாஜ அரசுக்கு பலம் இல்லாததுதான். இந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையிலும் ஜிஎஸ்டி மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 
 
இதற்கு அடுத்தபடியாக நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டப் பேரவைகளில் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். ஜி.எஸ்.டி மசோதாவுக்கு 17 மாநில சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 
 
இதனால் இந்த மசோதா சட்ட அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜிஎஸ்டி கவுன்சில் ஒன்றை உருவாக்க வேண்டும். கவுன்சிலில் வரி விகிதங்களை நிர்ணயிக்க வேண்டும். இதன்பின்னர்தான் ஜிஎஸ்டி மசோதா நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சோ.கார்த்திகேயன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ