Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வட கொரியாவில் அணு ஆயுத சோதனையால் சரிந்த சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (09.09.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
கடந்த வர்த்தகத்தில் குறியீடு 118.92 புள்ளிகளாக அதிகரித்து 29,045.28 புள்ளிகளாக முடிவடைந்துள்ளதை அடுத்து, வாரத்தின் இறுதிநாளான இன்று வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 17.62 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 18.20 புள்ளிகள் குறைந்தும் ப்ளாட் ஆக வர்த்தகமடைந்தது. வங்கி, ஆட்டோ, நுகர்வோர் சாதனங்கள், எப்எம்சிஜி, உலோகம் மற்றும் மூலதன பொருட்கள் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன. 
 
ஐரோப்பிய மத்திய வங்கியின் நிச்சயமற்ற நடவடிக்கை மற்றும் வட கொரியா இன்று ஐந்தாவது முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியதையடுத்து முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகள் விற்பனை செய்ததால் சந்தை சரிவில் முடிவடைந்தது. இதுமட்டுமின்றி இன்று ஐஐபி டேட்டா வெளியாக இருப்பதால் முதலீட்டாளர்கள் உஷாராக வர்த்தகம் மேற்கொண்டதால் சென்செக்ஸ் சரிந்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 248.03 புள்ளிகள் குறைந்து 28,797.25 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 85.80 புள்ளிகள் குறைந்து 8,866.70 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஓஎன்ஜிசி 254.95 3.51%
கெயில் 395.00 1.61%
விப்ரோ 480.65 1.41%
டிசிஎஸ் 2,352.45 1.31%
ரிலையன்ஸ் 1,044.55 1.08%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஹிண்டால்கோ 154.85 -4.38%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,953.70 -3.93%
யெஸ் பேங்க் 1,276.25 -3.91%
ஆக்சிஸ் வங்கி 613.10 -2.58%
ஐடிசி 258.30 -2.49%

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close