Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! 
மெட்டல் & ஆயில்  
 
 
 
சோ.கார்த்திகேயன்
 
 இந்த வாரம் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைப்போக்கு குறித்து ‘இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ்’ நிறுவனத்தின் முதன்மை மேலாளர் முருகேஷ் குமார் விளக்குகிறார். 
 
தங்கம்! 
தொடர்ந்து சரிவைச் சந்தித்துவந்த தங்கம் கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில் விலை அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த வாரத்தின் பெரும்பாலான நாட்களிலும் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து இருந்தது. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறித்த டேட்டா சற்று ஏமாற்றத்தை அளித்ததே ஆகும். 
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெனெட் யெல்லேன் வட்டி விகிதம் வரும் மாதங்களில் உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. 
டெக்னிக்கல் சார்ட்படி, எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் அக்டோபார் மாத கான்ட்ராக்ட் இந்த வாரம் 31,500 முதல் 31,800 இடையே வர்த்தகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
வெள்ளி! 
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறித்த டேட்டா ஏமாற்றத்தை அளித்ததால் அமெரிக்க நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் பெரும்பாலான நாட்களில் ஏற்றத்தைச் சந்தித்தது. 
எதிர்பார்த்ததைப் போலவே, கடந்த வாரம் சர்வதேச சந்தையில் 19.8 டாலர் லெவலை வெள்ளி தொட்டது. டெக்னிக்கல் சார்ட்படி, வெள்ளியின் விலை வரும் நாட்களில் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. இது இந்த வாரமும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி டிசம்பர் மாத கான்டிராக்ட் 46,000 முதல் 48,500 வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கச்சா எண்ணெய்! 
எண்ணெய் விலை மற்றும் எதிர்காலத்தில் உற்பத்தியில் ஒத்துழைப்பது தொடர்பாக, சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா இடையே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் விளைவாக இறக்கத்தில் வர்த்தகமாகிவந்த கச்சா எண்ணெய் விலை கடந்த வாரத்தில் அதிகரித்துக் காணப்பட்டது. இதுமட்டுமின்றி, அமெரிக்கா வேலைவாய்ப்பு குறித்த டேட்டா ஏமாற்றத்தை அளித்ததால் அமெரிக்க நாணயத்தின் மதிப்பில் வீழ்ச்சி அடைந்ததால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக் காணப்பட்டது. 
டெக்னிக்கல் சார்ட்படி, சர்வதேச சந்தையில் 48 டாலர் முதல் 44 டாலர் வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்சிஎக்ஸ் சந்தையில் கச்சா எண்ணெய் செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் 2,900 முதல் 3,200 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இயற்கை எரிவாயு! 
கடந்த வாரத்துக்குமுன் வெளியான இயற்கை எரிவாயு கையிருப்பு குறித்த டேட்டா எதிர்பார்ப்பைவிட மிஞ்சி இருந்த காரணத்தினால் இதன் விலை எம்சிஎக்ஸ் சந்தையில் சரிவடைந்து காணப்பட்டது. 
இயற்கை எரிவாயுவைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான தேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அமெரிக்காவில் தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் இயற்கை எரிவாயுவின் தேவை அதிகம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 
எம்சிஎக்ஸ் சந்தையில் இயற்கை எரிவாயுவை செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் 170 முதல் 197க்கு இடையே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close