Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட்: பிரிச்சுப் போட்டா, லாபம் அதிகம்!

ஒரே இடத்துல நாலஞ்சு செடிகளை நடுறதைவிட, கொஞ்சம் இடைவெளிவிட்டு நட்டாதான் வேகமாவும், நல்லாவும் வளரும். அந்த மாதிரிதான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுலயும். கையில இருக்குற பணத்தை மொத்தமா ஒரே திட்டத்துல போடாம, பல்வேறு நிறுவனங்களோட பல்வேறு ஃபண்டுகள்ல பிரிச்சுப் போடணும். ஒரே ஃபண்டுல பணத்தைப் போடும்போது, அது நல்லா லாபம் கொடுத்தா உண்டு. ஒருவேளை நிலைமை சரியில்லாம அந்த ஃபண்ட் நஷ்டமாகுதுனு வைங்க... அப்ப நமக்கும் அதிக நஷ்டம் வந்திடுமே! அதனாலதான் பல ஃபண்டுகள்ல பிரிச்சுப் போடணும்னு சொல்றது.

அடுத்ததா, 'எனக்கு அப்பப்போதான் கையில ஏதாவது காசு கிடைக்கும். அதை எப்படி பல ஃபண்டுகள்ல போடுறது..?' இப்படி ஒரு சந்தேகம் நிறையப் பேருக்கு வரும். அதுக்கான பதில் கீழேயே இருக்கு.

பணம் கம்மியா இருக்கா..?
இருக்கவே இருக்கு எஸ்.ஐ.பி!

கையில பணம் இருக்கும்போதெல்லாம் ஃபண்டுல போட்டுக்கிட்டே வர்ற எஸ்.ஐ.பி. திட்டத்துல முக்கியமான ஒரு லாபம் இருக்கு. சந்தையோட ஏற்றத்தாழ்வுனால அந்த ஃபண்டோட என்.ஏ.வி. ஏறி - இறங்குறபட்சத்துல, சராசரியா நிறைய யூனிட்டுகள் நமக்குக் கிடைக்கும்.

வழக்கமாக எஸ்.ஐ.பி. முறையில மாசம் ஒருமுறை குறிப்பிட்ட தொகைக்கு யூனிட்கள் வாங்கினாலும், இடையில திடீர்னு சந்தை சரியற சமயத்துல தனியா செக் கொடுத்து கூடுதலாக யூனிட்கள் வாங்கினா, இன்னும் அதிக லாபம் கிடைக்கும். இதுல முக்கியமா கவனிக்கவேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு... மூணு மணிக்குள்ள செக் கொடுத்தா, அன்றைய என்.ஏ.வி. மதிப்புக்கு யூனிட்களை ஒதுக்குவாங்க. டைம் அதைத் தாண்டிட்டா மறுநாள் கணக்குத்தான்!

நுழைவு, வெளியேறும் கட்டணங்கள்!

இது ரெண்டும் முக்கியமான விஷயம். ஒரு மியூச்சுவல் ஃபண்டுல பணத்தைப் போடும்போது கட்டவேண்டியது நுழைவுக் கட்டணம். இது ஒரு சதவிகிதத்திலேர்ந்து இரண்டரை சதவிகிதம் வரை இருக்கும். சில திட்டங்கள்ல நுழைவுக் கட்டணம் இருக்காது. புரோக்கர்கள், ஏஜென்ட்டுகளைத் தவிர்த்துட்டு, நேரடியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்லயும், அவங்களோட விநியோக மையங்கள்ல அல்லது அவங்களோட கிளை அலுவலகங்கள்ல முதலீடு செஞ்சா, அதுக்கும் நுழைவுக் கட்டணம் கிடையாது. இதுபோக, பெரும்பாலான குளோஸ்ட் எண்டட் திட்டங்கள் நுழைவுக் கட்டணம் இல்லாமதான் வருது. மாசா மாசம் பணம் போடுற எஸ்.ஐ.பி. திட்டங்கள் சிலதுக்கும் இந்தக் கட்டணம் வாங்குறதில்லை. ஒருவேளை வாங்கினாலும், மத்ததை விட இந்தத் திட்டத்துக்கு கம்மியா இருக்கும்.

வாங்கின ஃபண்டை விற்கும்போது கட்டவேண்டியதுதான் வெளியேறும் கட்டணம். இது ஒன்றி-லிருந்து மூன்று சதவிகித அளவுக்கு இருக்கும். குளோஸ்ட் எண்டட் திட்டங்-கள்ல, அந்தத் திட்டத்தோட முதிர்வுக் காலத்துக்குப் பிறகு விற்றால் இந்தக் கட்டணம் இல்லை. ஓப்பன் எண்டட் திட்டங்கள்ல, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு (6 மாதம் அல்லது 1 வருடம்) அப்புறம் விற்றாலும் இந்தக் கட்டணம் கிடையாது. அதனால ஒரு ஃபண்டோட யூனிட்டுகளை விக்கிறதுக்கு முன்னாடி, இதை-யெல்லாம் கவனமா பார்த்துக்கணும்.


(நாணயம் விகடன் எல்.கே.ஜி இணைப்பு )
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP