Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! 
அக்ரி கமாடிட்டி
 
இந்த வாரம் மென்தா ஆயில், சீரகம், ஏலக்காய், கடுகு எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து கேடியா கமாடிட்டி நிறுவனத்தின் சென்னை பிராந்திய மேலாளர் கே.சரவணன் விளக்குகிறார்.
மென்தா ஆயில்!
மென்தா ஆயில் ஸ்பாட் சந்தையில் வரத்து மிகவும் குறைந்து வருகிறது. எனவே, வரும் வாரத்தில் மென்தா ஆயில் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மென்தா ஆயில் விலை கிட்டத்தட்ட 11% வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. 
சீனாவின் தேவை குறைந்துள்ளதாலும், பொருளாதார மந்த நிலைமை காரணமாகவும் விலை குறைந்தது. ஆனால், வரும் வாரங்களில் உள்நாட்டு தேவை அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. எனவே, என்சிடிஇஎக்ஸ் சந்தையில் மென்தா ஆயில் செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் 903 என்ற நிலையில் வாங்கலாம். 939 வரை செல்ல வாய்ப்புள்ளது. 

சீரகம்!
சீரகம் ஸ்பாட் சந்தையில் தேவை குறைவாக இருந்த காரணத்தினால் விலையில் சற்று வீழ்ச்சி அடைந்து, 17,600 என்ற நிலை வரை எட்டியது. ஆனால், வரும் நாட்களில் சீரகத்தின் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதுமட்டுமின்றி சீனா மற்றும் பிற நாடுகளில் சீரகத்தின் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் என்சிடிஇஎக்ஸ் சந்தையில் சீரகத்தின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீரகத்தின் விலை 16,800 என்ற நிலை வரும்போது வாங்கலாம். 18,900 வரை செல்ல வாய்ப்புள்ளது.

ஏலக்காய்!
ஏலக்காய் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் கடந்த வாரம் விலை அதிகரித்து வர்த்தகம் நடைபெற்றது. இதற்கான காரணம் ஏற்றுமதியாளர்களின் வாங்கும் திறன் அதிகமாக உள்ளது. 
ஆனால், இது வரும் வாரங்களில் ஏலக்காய் விலை சற்று வீழ்ச்சியடையும் என்ற நம்பப்படுகிறது. ஏனெனில் ஸ்பாட் சந்தையில் ஏலக்காய் வரத்து அதிகமாக காணப்படுகிறது. 
எனவே, வரும் வாரத்தில் 1,189 என்ற நிலையில் ஏலக்காயை விற்கலாம். 1,130 வரை செல்ல வாய்ப்புள்ளது. 

கடுகு!
என்சிடிஇஎக்ஸ் சந்தையில் கடுகின் விலை கடந்த வாரம் வீழ்ச்சியடைந்தது. இது வரும் வாரத்திலும் தொடரும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் கடுகு உற்பத்தி கடந்த வருடத்தைவிட இந்த ஆண்டு அதிகமாக இருக்கிறது. 
எனவே, வரும் வாரத்தில் கடுகின் விலை 4,550 வரை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுகு அக்டோபர் மாத கான்டிராக்ட் 4,780 என்ற நிலையில் விற்கலாம். 
 
 

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ