Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்காவில் வட்டி விகிதம் எதிர்பார்ப்பால் சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு!

காலை 10.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (12.09.16) காலை நேர வர்த்தகத்தில் அதிக இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
ஐரோப்பிய மத்திய வங்கியின் நிச்சயமற்ற நடவடிக்கை மற்றும் வட கொரியா இன்று ஐந்தாவது முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியதையடுத்து முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகள் விற்பனை செய்ததால் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை சந்தை சரிவுடன் நிறைவடைந்தது. 
 
இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தின் போது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் இந்திய பங்குச் சந்தை அதிக இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் பொறுத்தவரை 546 புள்ளிகள் வரை சரிந்து 28,251.31 என்ற நிலையிலும், நிஃப்டி 8,700க்கு கீழேயும் வர்த்தகமானது. 
 
தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 426.42 புள்ளிகள் குறைந்து 28,370.65 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 137.40 புள்ளிகள் குறைந்து 8,728.00 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
இன்போசிஸ் 1,051.55 1.55%
டெக் மஹிந்திரா 463.65 1.17%
ஹெச்சிஎல் டெக் 780.95 0.05%
விப்ரோ 480.80 0.03%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஹிண்டால்கோ 147.45 -4.78%
யெஸ் பேங்க் 1,220.00 -4.41%
அதானி துறைமுகங்கள் 260.75 -4.21%
ஆக்சிஸ் வங்கி 590.70 -3.65%
பேங்க் ஆப் பரோடா 166.10 -3.40%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ