Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட்டி விகிதம் உயர்வு கவலையால் சரிந்தது சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (12.09.16) மாலை நேர வர்த்தகத்தில் அதிக இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
இன்றைய காலை நேர வர்த்தகத்தின் போது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட்டதால் இந்திய பங்குச் சந்தை அதிக இறக்கத்தில் வர்த்தகமானது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 248.03 புள்ளிகளாக குறைந்துள்ளதை அடுத்து, இன்று காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 545.94 புள்ளிகள் வரை சரிவடைந்தது. 
 
ஐசிஐசிஐ வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, டாடா ஸ்டீல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எல் அண்ட் டி, எஸ்பிஐ, அதானி துறைமுகங்கள், பஜாஜ் ஆட்டோ, ஓஎன்ஜிசி, மாருதி சுசுகி, ஆசிய பெயிண்ட், ஹெச்டிஎப்சி லிமிடெட் போன்ற முன்னணி நிறுவனங்கள் அதிக சரிவுடன் காணப்பட்டன.
 
இதுமட்டுமின்றி ஜூலை மாதத்திற்கான ஐஐபி டேட்டா மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான பணவீக்கம் குறித்த டேட்டா இன்று வெளியாக உள்ளதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் மேற்கொண்டதால் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 443.71 புள்ளிகள் குறைந்து 28,353.54 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 151.10 புள்ளிகள் குறைந்து 8,715.60 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
இன்போசிஸ் 1,054.00 1.79%
டெக் மஹிந்திரா 463.85 1.21%
ஹெச்சிஎல் டெக் 782.70 0.28%
டிசிஎஸ் 2,359.05 0.28%
ரிலையன்ஸ் 1,046.50 0.19%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஹிண்டால்கோ 140.85 -9.04%
பேங்க் ஆப் பரோடா 161.75 -5.93%
யெஸ் பேங்க் 1,205.10 -5.57%
டாடா ஸ்டீல் 373.30 -5.40%
அம்புஜா சிமென்ட்ஸ் 259.85 -4.69%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ